Tuesday 17 August, 2010

நாணயங்கள்









நாணயங்களைக் காணவில்லை
பணம் என்றால் பிணம் கூட வாயைப் பிளக்கும்' என்பது முதுமொழி. இன்றைய உலகில் பணம் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக ஆகிப்போய் உள்ளது.

பணம் இல்லாதவன் பிணம்', பணம் பத்தும் செய்யும்' என்பதுபோல இன்றைய யுகம் ஆகிவிட்டதை நாம் பார்க்கிறோம். பண்டைய காலத்தில் மனிதன் வணிகம் செய்யும்போது ஒரு பொருளைக் கொடுத்து மற்றொரு பொருளை பெற்றுள் கொள்வதே வழக்கமாக இருந்தது. அப்போதெல்லாம் பணம் என்ற ஒன்றை அவர்கள் கண்டறியவில்லை. இதனால் பல பிரச்சினைகளை அவர்கள் சந்தித்து வந்தனர். இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு வராதா என அவர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

அரிய வகை நாணயங்கள்

இதற்கு ஒரு வடிகாலாக மனிதன் நாணயங்களை பயன்படுத்தத் தொடங்கினான். நாணயங்கள் பயன்படுத்துவதின் மூலம் ஒரு பொருளை கொடுத்து மற்றொரு பொருள் வாங்குவதின் மூலம் ஏற்படும் சிரமம் வெகுவாகக் குறைந்தது. ஆதி காலத்தில் மனிதர்கள் நாணயங்களை தங்கத்தாலும், செம்புகளாலும், வெள்ளியாலும் தயாரித்து பயன்படுத்தி வந்தனர். நவீன யுகத்தில் அதை மாற்றி ரூபாய் நோட்டுகளாக காகிதத்தில் பயன்படுத்தத் தொடங்கினர். நமது நாட்டில் ஒவ்வொரு வருடமும் ரூபாய் நோட்டுகளையும், காசுகளையும் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. நூறு வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நாணயங்கள் மிகவும் கலைநயமிக்கதாகவும், பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருந்தது. அப்போதெல்லாம் நாணயங்கள் வெளியிடப்பட்டதும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும்.
புதிதாக வெளிவந்துள்ள 10 ரூபாய்

இந்தியாவில் நாணயங்கள் கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. இதில் Proof Coins மற்றும் Uncirculated Coins என்று இரு வகையான நாணயங்கள் உள்ளன. இந்த இரண்டு வகையான நாணயங்கள் பொழுதுபோக்குக்காக சேகரிப்பதற்கு மட்டுமே தவிர வர்த்தகத்துக்கு உபயோகப்படாது. 1964ல்தான் முதல் கமோமரேட்டிவ் நாணயங்கள் அச்சடிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் சிறப்பு நாணயங்கள் அச்சிடப்படும்போது அதைப் பற்றிய விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியாகும்.

நாணயத்தை வெளியிடும் பிரனாப் முகர்ஜி

இப்போது அந்நிலை மாறி விட்டது. புதிதாக நாணயம் வெளியிட்டு இரண்டு வருடங்கள் கழித்தும் சில நாணயங்கள் பெரும்பாலான மக்களிடம் கிடைப்பதில்லை. அந்த வகையில் சென்ற வருடம் 10 ரூபாய் நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்தும் மக்களின் பயன்பாட்டிற்கு அந்த நாணயம் வரவில்லை.

ரூபாய்க்கான குறியீட்டை கண்டுபிடித்த தமிழகத்தைச் சேர்ந்த உதய் குமார்


ஏனென்றால் அந்த நாணயம் கலைநயமிக்கதாகவும், செம்பு மற்றும் தாமிரத்தால் ஆனதாகவும் இந்ததால் சில கள்ளப் பேர்வழிகள் அதை பதுக்கத் தொடங்கினர். இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் அந்த நாணயம் எப்படி உள்ளது என்பதைக் கூட பார்க்க முடியாமல் போனது. நாணயங்களைப் பதுக்குவது சட்டப்படி குற்றமாகும். இதற்கு இரண்டு வருடங்கள் கூட சிறைத் தண்டனை கூட கிடைக்கும். சிலர் நாணயங்களை சேகரிக்கிறோம் என்ற பெயரில் புதிதாக வெளியிடப்பட்ட நன்கு கலைநயமிக்க நாணயங்களை பதுக்கி வைத்துள்ளனர். இதுபோன்ற செயல்களால் நாட்டில் அதிகப்படியான புதிதாக வெளியிடப்பட்ட நாணயங்கள் உலவி வருவது குறைந்து வருகிறது.

பல்வேறு வகையான ஐந்து ரூபாய் நாணயங்கள்

நாணயங்களை சேமித்து வைப்பதற்கென்றே காயின் செசைட்டி என்ற அமைப்பு உள்ளது. இதனை தொடர்பு கொண்டால் எப்போதெல்லாம் புதிதாக நாணயங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த அமைப்பு மூலம் நாணயங்களைப் பெற்று சேகரித்து வைத்துக் கொள்ளலாம். நாணயங்கள் சேகரிப்பது பொழுதுபோக்காகவும், பொது அறிவு வளர்ச்சிக்காவும் மட்டுமில்லாமல் சிறந்த முதலீடாகவும் சிலர் கருதுகின்றனர்.


ஏனென்றால் இந்த வகை அரிய நாணயங்கள் பிற்காலத்தில் ஏலத்தில் விடும்போது அந்த நாணயத்தின் மதிப்பை விட பன்மடங்கு விலை வைத்து அந்த வகை நாணயங்களை ஏலத்தில் விடுகின்றனர். இதன் மூலம் நல்ல வருவாயையும் அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. குறிப்பாக இப்போது வெளியாகி உள்ள ரூ. 10 நாணயம் பிற்காலத்தில் அதாவது 5 வருடங்கள் கழித்து ஏலத்தில் விடும்போது அதன் மதிப்பு ரூ. 5,000 என்றும் ரூ. 10,000ம் என்று ஆகி விடும். இதை கருத்தில் கொண்டுதான் நாணயம் சேகரிப்போர் சிலர் இந்த கலை நயமிக்க 10 ரூபாய் நாணயத்தை பதுக்கி வைத்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஓட்டை காலணா


(நீங்கள் நாணயத்தை சேமித்து வைக்கிறேன் என்று இதுபோன்ற செயல் இறங்கி விட மாட்டீர்கள் என்று கருதுகிறேன். அப்படி சேமித்து வைப்பதாக இருந்தால் ஒரே வகையான நாணயமாக சேமித்து வைக்காமல் வேவ்வோறு வகையான நாணயமாக சேமித்து வைக்கவும்).

எது எப்படியோ மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு வராத வகையில் நாணயம் சேகரிப்போர் சிறந்த முறையில் இவற்றைச் சேகரித்தால் (அதாவது ஒருவர் ஒரு நாணயத்தை சேகரிப்பது) மக்களின் பயன்பாட்டிற்கு வெகு விரைவில் கிடைத்து விடும். நான் கூட 10 ரூபாய் நாணயத்தை பார்த்ததே இல்லை. நெட்டில்தான் பார்த்திருக்கிறேன்.
Read more »

0 comments:

Post a Comment

ஆயிஷா மைந்தன்