பால்தாக்கரேக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதே இந்துத்துவாவினரின் வேலையாகிவிட்டது. அவ்வப்போது இஸ்லாத்திற்கும் , முஸ்லிம்களுக்கும் எதிராக ஏதாவது ஒன்றைக் கூறி அமைதியைக் கெடுத்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்துவதே இந்துத்துவாவினரின் ஒரே குறிக்கோளாகும்.
இந்த அடிப்படையில்தான் அடுத்த சர்ச்சையை இந்துத்துவா வெறியன் சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே கிளப்பியுள்ளார்.
முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பால்தாக்கரே தமது கட்சி ஏடான சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளார். பர்தாவை தடைசெய்ய வேண்டும் என்பதற்கு பால்தாக்கரே கூறியுள்ள காரணம்தான் முட்டாள்தனமானதாகும்.
சாந்தாகுரூசில் வி.என்.தேசாய் மாநகராட்சி மருத்துவமனையில் பிறந்து இரண்டு மாதமே ஆன ஆண்குழந்தையை கடந்த பதினைந்தாம் தேதி பர்தா அணிந்த ஒரு பெண் திருடிச் சென்று விட்டாராம் . இதன் காரணமாகத்தான் திருட்டிற்குப் பயன்படும் பர்தா எனும் ஆடையை தடைசெய்ய வேண்டும் என்ற அறிவுப்பூர்வமான(?) காரணத்தை பால்தாக்கரே கூறியுள்ளான்.
பர்தாவை தடைசெய்ய வேண்டும் என்பதற்கு பால்தாக்கரே கூறியுள்ள காரணம் மிகவும் முட்டாள்தனமானதாகும். பர்தா என்பது பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் தரக்கூடிய ஒரு ஆடையாகும். இந்த கண்ணியமிக்க ஆடையை அணிந்து ஒருவர் ஒரு தவறை செய்து விட்டால் அந்த ஆடையையே தடைசெய்ய வேண்டும் என்பது முட்டாள்தனமானதாகும்.
எத்தனையோ பேர் போலீஸ் அதிகாரி போல் சீருடை அணிந்து மக்களை ஏமாற்றி பலகேடுகெட்ட காரியங்களைச் செய்கின்றனர். மேலும் வங்கி அதிகாரிகளைப் போல் சீருடை அணிந்து மிகப் பெரும் மோசடியில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் கூட வருமான வரித்துறை அதிகாரிகளைப் போல் நடித்து ஒரு வீட்டில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது பத்ரிகைகளில் பரபரப்பான செய்தியாக வெளிவந்துள்ளது.
பல்வேறு துறைகளில் உள்ளவர்களின் சீருடைகளை அணிந்து சமூகவிரோதிகள் பல்வேறு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அனைத்து சீருடைகளையும் தடை செய்ய வேண்டுமென்று பால்தாக்கரே கூறுவரா?
காவியாடை அணிந்து எத்தனையோ பேர் காமலீலைகளில் ஈடுபட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்டு ஊடகங்களால் கேவலப்படுத்தப்படுகின்றனர். எனவே காவியாடை அணிவதற்கு தடைவிதிக்க வேண்டுமென்று பால்தாக்கரே கூறுவாரா?
பர்தா என்ற கண்ணியமிக்க ஆடையை அணிவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கூறுவதின் மூலம் அமைதியாய் உள்ள முஸ்லிம் சமுதாயத்தை தூண்டிவிட்டு பெரும் கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்பதே பால்தாக்கரே போன்ற இந்துத்துவவாதிகளின் நோக்கமாகும்.
எனவே இதுபோன்ற சமூகவிரோத கருத்துக்களைத் தெரிவித்து முஸ்லிம்களின் கோபத்தை தூண்டும் பால்தாக்கரே மீது மத்திய அரசும், மகராஷ்டிர மாநில அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் இந்திய அளவில் முஸ்லிம்கள் மாபெரும் போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறோம்.
இப்படிக்கு
ஆர் ரஹ்மதுல்லாஹ்
மாநிலத் துணைத் தலைவர்
1 comments:
sari than.. ithu pegalukku pathukappu than.. tharpothu ithai neriya per anivathu illai... aanalum ithu oru palakkam than . matha kattalaiyaga irukka kudathu..
Post a Comment