Tuesday, 13 July 2010


பிரதமர் சந்திப்பும் அவதூருகளும்

தமிழகத்தைக் குலுக்கிய தீவுத்திடல் மாநாட்டினால் வயிறு எரிந்து போனவர்கள் இட ஒதுக்கீட்டைப் பின்னுக்குத் தள்ளி மக்கள் எழுச்சியை மறக்கடிக்கச் செய்யும் எண்ணத்துடன் பயனற்ற கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். இவர்களின் செயலைப் பார்த்து இதுவரை இவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும் இவர்களின் காழ்ப்புணர்ச்சி கண்டு வெறுப்படையும் வகையில் எழுப்பும் கேள்விகளில் இரண்டாவது கேள்வி பிரதமரிடம் அப்பாயிண்ட் மெண்ட் கேட்டார்களா? பிரதமரே அழைத்தாரா? என்பது தான்.

இதற்குரிய பதிலைச் சொல்வதற்கு முன் இதனால் சொல்ல வரும் செய்தி என்ன? அழைக்கப்படாமலே கதவை உடைத்துக் கொண்டு போய் பிரதமரைப் பார்த்து இருக்கட்டும். அதனால் பிரதமரைச் சந்தித்ததும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியதும் இல்லாமல் போய் விடுமா? அல்லது தீவுத்திடல் காலியாகக் கிடந்தது என்று அர்த்தமாகி விடுமா? இதை கேட்பதன் மூலம் பரப்புவதன் மூலம் சொல்ல வரும் செய்தி தான் என்ன? ....................
இப்போது கேள்விக்கு வருவோம்.
பிரதமர், முதல்வர் ஆகிய பொறுப்புக்களில் உள்ளவர்கள் அதிகாரிகள் அமைச்சர்களைத் தவிர யாரையும் அழைப்பது மரபு அல்ல. அழைப்பதாக இருந்தாலும் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டதன் அடிப்படையில் அழைப்பதாகத் தான் பதிவு செய்யப்படும். பிரதமர் அழைக்கும் அளவுக்கு யாரும் முக்கியமானவர் அல்ல என்பது இதற்குக் காரணம்.
தமிழக முதல்வர் அவராக நம்மைச் சந்திக்க விரும்பினால் கூட முதல்வர் சந்திக்க விரும்புகிறார்.; நீங்கள் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் கொடுங்கள் என்று தான் தகவல் தருவார்கள். அதன்படி கடிதம் கொடுத்த பின் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதைத் தெரிவிப்பார்கள்.
தமிழக முதல்வர் அவர்களை இந்த அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்துள்ளது.
மாநாடு எதற்காக நடத்துகிறீர்களோ அந்தக் கோரிக்கையை பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவிக்கும் சொல்லலாமே என்று உளவுத்துறை மூலம் சொல்லப்பட்டது. பிரதமர் அளவுக்கு இது சென்றடையுமா என்பது தெரியாது. ஆனாலும் கவர்னரைச் சந்தித்து எங்கள் கோரிக்கையை மத்திய அரசுக்குத் தெரிவிப்போம் என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சொல்லப்பட்டது. நீங்கள் பிரதமரிடம் இது குறித்து பேசுவதற்காக நேரம் ஒதுக்கிக் கேளுங்கள்! கூட்டம் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு வந்தால் உடனே உங்களுக்கு அழைப்பு வரும். இல்லாவிட்டால் கவர்னர் வழியாக மத்திய அரசுக்குத் தெரிவிக்கலாம் என்று உளவுத்துறை அதிகாரிகள் சொன்ன பின் மாநாட்டுக்கு அழைப்பு கொடுப்பதற்காக ஹாரூன் எம்பி அவர்களை தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்தது. அவர் மாநாட்டுக்கு வருவதில் காட்டிய ஆர்வம் இட ஒதுக்கீடு விஷயத்தில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டை அறிந்து கொண்டதால் அவர் மூலமே பிரதமர் சந்திப்பு குறித்த கடித்தை அனுப்ப எண்ணி அவரிடம் கேட்ட போது மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டார். அதன் அடிப்படையில் கடிதம் கொடுக்கப்பட்டது.
அரசின் விருப்பங்கள் உளவுத்துறை வழியாகத் தான் சொல்லப்படும்.
இட ஒதுக்கீடு குறித்து பேசுவதற்கு நேரம் கேட்டு விட்டு தவ்ஹீத் ஜமாஅத் போய் காத்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் அழைத்தால் போவது, இல்லாவிட்டால் கவர்னரிடம் கொடுப்பது என்று முடிவு செய்திருந்த நேரத்தில் தான் அழைப்பு வந்தது.
அழைப்பு வந்தது என்பதும் நாம் நேரம் ஒதுக்கிக் கேட்டோம் என்பதும் முரண்பாடானது அல்ல. ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது தான். நாம் நேரம் ஒதுக்கிக் கேட்டோம் என்பதும் உண்மை. அவர்கள் எங்களை அழைத்தார்கள் என்பதும் உண்மை. ஒரு முரண்பாடும். இல்லை. அவர்கள் அழைக்காமல் போய் நினைத்தவுடன் சந்திக்க முடியாது.
யார் வேண்டுமானாலும் பிரதமரைச் சந்திக்கலாம் என்றும் இவர்கள் பரப்புகின்றனர்.
தமுமுக தேசிய லீக் தலைவர்கள் சந்தித்துள்ளனர் என்று கூறி மக்கள் எழுச்சியை அற்பமாகக் காட்டலாம் என்று கருதுகின்றனர். தமுமுக பிரதமரைச் சந்தித்தது குறித்து நாம் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் மாநாடு குறித்து நம்மை எந்த விமர்சனமும் செய்யாததால் அந்தச் சந்திப்புக்கும் நமது சந்திப்புக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் கூற அவசியம் இல்லை.
இது குறித்து தேசிய லீக் தலைவர் அவர்களிடமும் ஹாரூன் அவர்களிடமும் விசாரித்தால் அவர்கள் வித்தியாசத்தைக் கூறுவார்கள்.
பிரதமர் சந்திப்பு குறித்த் செய்தியை ஆனலைன் பீஜே.காம் இல் ஹாரூன் அவர்கள் பார்த்துவிட்டு அதில் ஒரு தவறு உள்ளது. பிரதமர் நம்மைச் சந்தித்தது வெளிநாட்டு அதிபர்களைச் சந்திக்கும் அறை. அவர் அருகில் வெளிநாட்டு அதிபர்கள் மட்டுமே அமரும் வகையில் ஒரு இருக்கை போடப்படும் அந்த இருக்கையில் தான் பீஜேயை அமர வைத்துள்ளார்கள் என்று நான் கூறினேன். நீங்கள் அமைச்சர்களை அமர வைக்கும் இடம் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள் என்று அவர் கூறினார்.
ஹாரூன் அவர்களிடம் இது குறித்து யாரும் விசாரித்துக் கொள்ளலாம். வெளிநாட்டு அதிபர்களுக்கு கொடுக்கும் மரியாதை முஸ்லிம் சமுதாயத்துக்கு கொடுக்கப்பட்டது என்றால் இது அழைப்பு இல்லா விட்டால் நடந்திருக்குமா?
தேசிய லீக் தலைவர் பஷீர் அவர்கள் இன்னொரு செய்தியை குறிப்பிட்டார். அதாவது முக்கியத்துவம் இல்லாத சந்திப்பு என்றால் நின்று கொண்டு மணு வாங்குவார்கள். அல்லது உள்ளே அனுப்பும் போதே டூ மினிட்ஸ் என்று சொல்லி அனுப்புவார்கள். ஓரளவு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தால் ஒரு டீ வழங்குவார்கள்.
முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு என்றால் அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்கேற்ப உபசரிப்பு இருக்கும்.
நாம் தமிழகத்தில் இருந்து சென்றதால் தமிழக உணவான வடை மற்றும் தமிழகப் பலகாரங்களுடன் உபசரிப்பு இருந்தது. வெறுமனே மனுவை வாங்கிக் கொண்டு அனுப்பாமல் கலந்துரையாடலாக கருத்துப்பரிமாற்றம் செய்யும் அளவுக்கு அளீக்கப்பட்ட முக்கியத்துவத்தை இவர்கள் சாதாரணமாக ஆக்கி அற்ப திருப்தி பட்டுக் கொள்கிறார்கள். இது போன்ற வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பவர்கள் அதாவது இருப்பதை இல்லாததாகக் காட்டுவது, குறை கூற முடியாததை குறை கூறுவது, சின்னதைப் பெரிதாகக் காட்டுவது, பெரியதைச் சின்னதாகக் காட்டுவது போன்றவை மன நோயின் ஆரம்ப அறிகுறியாகும். ஏதோ ஒன்றிரண்டு தடவை இப்படி நடந்து கொண்டால அது நார்மல் என்று மருத்துவ உலகம் சொல்கிறது. இதுவே ஒருவருக்கு குணமாகிப் போனால் மன நோய் முற்றி வருகிறது என்பதற்கான அறிகுறியாகும். நாளை இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இந்த நோய் பற்றிக் கொண்டு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதையும் இத்தகயோருக்கு சொல்கிறோம். ஒரே விஷயத்தை திரும்பத் திருமப சொல்லுதல் விளக்கம் சொல்லப்பட்ட பின்பும் அறிவு சொல்லும் தீர்ப்புக்கு எதிராக நடப்பதும் கூட மனநோய் தான். இதை நாம் மிகைப்படுத்திக் கூறவில்லை. மனோதத்துவ நிபுனர்களிடம் இந்தத் தண்மைகள் குறித்து கேட்டால் அவர்கள் உண்மைப்படுத்துவார்கள்.
Read more »

0 comments:

Post a Comment

ஆயிஷா மைந்தன்