Sunday, 12 September 2010

பாலிமார் தொலைக்காட்சிக்கு மறுப்பு


மரியாதைக்குரிய பாலிமார் தொலைக்காட்சி செய்தி ஆசிரியருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவனர் பீ.ஜைனுல் ஆபிதீன் எழுதுவது.

உங்கள் fir என்ற நிகழ்ச்சியை இன்று பார்த்தேன். அதில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் கட்டுக்கதையாகவும் பொய்களின் தொகுப்பாகவும் ஆதாரமற்றதாகவும் குறிப்பாக எங்கள் இயக்கத்தின் மீது அவதூறு பரப்பும் வகையிலும் அமைந்திருந்தது.

வந்தார்களாம் போனார்களாம் என்ற தோரணையில் கற்பனையாக கதை விட்டுள்ளீர்கள்.

துப்பாக்கியால் சுட்டவர் எங்கள் இயக்கத்தின் உறுப்பினர் அல்ல. எங்கள் ஆதரவாளரும் அல்ல. எங்கள் பள்ளிவாசலில் எந்தக் காலத்திலும் வந்து தொழுகை நடத்தியவரும் அல்ல. கொள்கை அடிப்படையில் அவர் எங்களுக்கு எதிரானவர். அவரது மைத்துனர் தாக்கப்பட்டதற்காக அவர் ஒரு கும்பலுடன் வந்து இதை நிகழ்த்தியுள்ளார் என்பதை நான் தெளிவாக சொல்லி இருந்தேன். அது நீங்கள் கற்பனை செய்திருந்த முன்னரே தயார் செய்து வைத்திருந்த கட்டுக்கதைக்க்கு எதிராக இருந்ததால் அதை மட்டும் வெட்டி தவ்ஹீத் ஜமாஅத் தான் துப்பாக்கியுடன் வந்தது என்று சித்தரித்து உள்ளீர்கள்.

fir என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தும் உங்களுக்கு இது குறித்து காவல் துறை அதிகாரிகளிடம் விசாரிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. உள்ளூரில் உள்ள எங்கள் எதிரிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு இதை வெளியிட்டதாக மக்கள் நினைக்கும் அளவுக்கு உங்கள் நிகழ்ச்சி அமைந்திருந்தது.

முப்பது ஆண்டுகளாக மூடர்களால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வந்தும் பதிலடி கொடுக்காமல் சகிப்புத் தன்மை கடைப்பிடித்து வருவது தான் எங்கள் நிலையாக உள்ளது. இதனால் அனைத்து முஸ்லிம்களின் ஆதரவுடன் சென்னையில் 12 லட்சம் முஸ்லிம்களைத் திரட்டி மாநாடு நடத்தும் அளவுக்கு மாபெரும் மக்கள் இயக்கமாக எங்கள் இயக்கம் உள்ளது.

சட்டப்படி வழக்கறிஞர் மூலம் அறிவிக்கை அனுப்பி அவதூறு வழக்குகளை உங்களுக்கு எதிராக நாங்கள் தொடுக்கும் போது துப்பாக்கியால் சுட்டவர் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர் என்பதை நீங்கள் நிரூபித்துக் காட்டக் கடமைப்பட்டுள்ளீர்கள்.

இந்தச் செய்தியைத் தயாரித்த பெண்மணி விஜய் டிவியில் இஸ்லாத்துக்கு எதிராக ஒரு நிகழ்ச்சி தயாரித்தவர் என்பதாலும் விஜய் டிவி முற்றுகை என்று நாங்கள் அறிவித்து அந்த நிகழ்ச்சியை தடுத்ததால் இப்படி செய்து விட்டார் என்று நினைக்கிறோம்.
பொய்கள்

பொய் ஒன்று

குத்புதீன் என்பவர் வீட்டில் தொழுகை நடக்கவில்லை. குபுதீன் வீட்டில் தொழுகை நடந்தது என்று கூறினீர்கள்
அப்துர்ரஹ்மான் என்பவரின் வீட்டில் தான் தொழுகை நடந்தது. அதில் குத்புதீன் தொழ வந்தார் என்பதே உண்மை.

பொய் இரண்டு

குத்புதீனை ஜபருல்லா என்பவர் இனி மேல் இவர்களுடன் சேர்ந்து தொழக் கூடாது என்று எச்சரித்து கடுமையாக தாக்கியதால் அவர் தனது மைத்துனரும் அரசியல் கட்சியின் பிரமுகரும் செல்வந்தருமான ஹஜ் முஹம்மதுக்கு தகவல் சொல்லி உதவி தேடினார். மைத்துனர் ஹஜ் முஹ்ம்மதுவும் அவருடன் மூன்று கார்களில் வந்தவர்களும் எங்கள் ஜமாஅத்தை சேர்ந்தவர்களில்லை. அவர்களில் ஒருவர் கூட எங்கள் உறுப்பினர் அல்ல. ஆதரவாளரும் அல்ல. அந்தச் சம்பவத்தில் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த யாரும் துணை நிற்கவில்லை.

பொய் மூன்று

கொல்லப்பட்டவரில் ஒருவர் அதிமுக நிர்வாகி என்பதையும் அவருக்கு பக்கபலமாக அடியாளாக வந்த முன்று இந்துக்களும் அதிமுக நிர்வாகிகள் என்பதையும் ஜெயலலிதா இது குறித்து தனது அறிக்கையில் சொல்லியுள்ளார் என்பதையும் இருட்டடிப்பு செய்தீர்களா அல்லது உங்கள் செய்தி திரட்டும் தகுதியே இது தானா

பொய் நான்கு

மைக் போட்டுக் கொண்டு ஜபருல்லாவுக்கு இடையூறாக ஜாம்ஜாம் என்று நாங்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதாக கூறியதும் பொய். அதில் காட்டிய காட்சியும் பொய்யானவை. சப்தமிட்டு பிரார்த்தனை செய்யக் கூடாது என்பது தான் தவ்ஹீத் ஜமாஅதின் கொள்கை. அத்துடன் நீங்கள் காட்டிய காட்சியில் வண்ண வண்ண தொப்பி அணிந்ததாக காட்டும் காட்சியை பார்த்தாலே அவர்கள் சுன்னத் ஜமாஅத் என்பது தெரியும். நாங்க்ள் யாரும் வண்ணத் தொப்பி அணிவது கிடையாது.

இது குறித்து மேலும் விபரம் அறிய நாங்கள் வெளியிட்ட அறிக்கை, மெகா டிவியிலும் இமயம் டிவியிலும் ஒளிபரப்பிய விளக்க்ம் ஆகியவற்றை விரும்பினால் பார்க்கவும்.

http://onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/thupaki_soodu/

http://www.onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/nadanthathu_enna_thiruviraisseri/

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவும் அனைத்து மதத்தினரும் இணக்கமாக வாழவேண்டும் எனவும் பிரச்சாரம் செய்து தமிழக முஸ்லிம் இயக்கங்களில் மாபெரும் இயக்கமாக உள்ள - நாட்டின் பிரதமரே அழைத்துப் பேசும் அளவுக்கு செல்வாக்குள்ள இயக்கத்தை கொலைகார இயக்கமாக நீங்கள் சித்தரித்ததற்கு தக்க மறுப்பு வெளியிடாவிட்டால் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிகையை எங்கள் இயக்கம் எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன் பீ.ஜைனுல் ஆபிதீன்
Read more »

0 comments:

Post a Comment

Copyright © 2010 ஆயிஷா மைந்தன்

Template By Nano Yulianto | Page Navigation Abu Farhan