Thursday, 2 September 2010

மருத்துவம்

சுய வைத்தியர் ஆக வேண்டாம்
குழந்தைக்கு உடல் நலக்குறை ஏற்பட்டவுடன் நாம் என்ன ஏதோ என்று பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம். அங்கே மருத்துவர் பரிசோதித்து உடல் நலக்குறைக்கு தக்க வகையில் மருந்துகளை எழுதிக் கொடுத்தனுப்புவார்.
இதில் மற்றொரு வகையினர் உள்ளனர். அதாவது குழந்தைக்காகட்டும் தனக்காகட்டும் அவர்களே மருத்துவர்களாகி விடுவார்கள். மெடிக்கல் ஷாப்புக்கு சென்று குழந்தைக்கு பாராசிட்டமல் மாத்திரைகளையும், தனக்காக ரான்பாக்கி மாத்திரைகளையும் வாங்கிக் கொண்டு வந்து விடுவார்கள்.


இதில் எந்த அளவுக்கு அந்த மாத்திரைகளை கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. ஓவர் டோஸ் கொடுப்பதின் மூலம் குழந்தைக்கும், தனக்கும் அவர்களே வேட்டு வைத்துக் கொள்கின்றனர்.
இப்படி சுயமாக மருத்துவர் ஆக வேண்டாம் என்று சிட்னி பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் கூறியுள்ளார். இப்படி சுய வைத்தியர் ஆவதன் மூலம் எந்த நேரத்திற்கு எந்ததெந்த வகையான, எவ்வளவு மாத்திரைகளை இவர்கள் சரிவரத் தெரியாமல் உட்கொள்கின்றனர்.
மெடிக்கல் ஷாப்பில் இருக்கும் ஊழியர் இப்படித்தான் மருந்துகளைப் போட வேண்டும் என்று கூறினாலும் படிக்கத் தெரியாதவர்கள் சிலர் எந்தெந்த வேளைக்கு என்னென்ன மாத்திரைகளைப் போட வேண்டும் என்பதை மறந்துவிட்டு தப்பும் தவறுமாக மாத்திரைகளைப் போடுவதால் உடல் உபாதைகளுக்கும், ஸைடு எஃபெக்ட் எனப்படும் பக்க விளைவுக்கும் ஆளாகின்றனர்.
என்னதான் தகுந்த மருத்துவரிடம் தக்க ஆலோசனை பெற்று மருந்து வாங்கி உண்டாலும் எழுதிக் கொடுக்கும் மருத்துவரே சில சமயங்களில் தவறான மருந்துகளை எழுதிக் கொடுப்பதால் இதுபோன்ற பக்க விளைவுக்கு அப்பாவி பொது மக்கள் ஆளாகின்றனர்.
இதற்கு உதாரணத்திற்கு பல சம்பவங்களைச் சொல்லலாம். சமீபத்தில் நன்மங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி குழந்தை பெற்ற இரண்டு மாதத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைச் சந்தித்து உடல் நலக்குறைவு பற்றி எடுத்துக் கூற, மருத்துவரோ சில மருந்துகளை எழுதிக் கொடுத்திருக்கிறார்.

அவர் எழுதிக் கொடுத்த மருந்துகளை அந்தப் பெண்மணியின் கணவர் அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்புக்கு சென்று வாங்கி வந்து தன் மனைவியிடம் கொடுக்க அவரே அதை உட்கொண்ட சில நேரங்களில் உடல் எங்கும் கொப்புளங்கள் ஏற்படத் தொடங்கியது. இது குறித்து மருந்து எழுதிக் கொடுத்த மருத்துவரிடம் சென்று பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணியின் கணவர் சென்று கேட்கவே, "நான் சரியான மருந்துதான் எழுதிக் கொடுத்தேன். நீங்கள் அதை சரியாகப் போடாமல் தவறாகப் போட்டதால்தான் இப்படி ஆகியுள்ளது என்று மழுப்பியுள்ளார்.
பாதிப்பட்ட அந்தப் பெண்மணியின் கணவர் மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துகளையும், மெடிக்கல் ஷாப்பில் வாங்கிய மருந்துகளையும் எடுத்துக் காட்ட வாய் அடைத்துப் போன மருத்துவரோ நாளை வாருங்கள் என்று கூறி எஸ்கேப் ஆனார்.
உட-ல் கொப்புளங்கள் நிறைந்து புண்ணாகிப் போன அந்தப் பெண்மணியை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்ற நிலையிலும் அந்தப் பெண்மணியின் உடல் நிலை தேரவில்லை. உடல் நிலை மிகவும் மோசமாகி அவர் இப்போது இறந்து விட்டார். இப்போது அந்தப் பெண்மணியின் கணவர் இரண்டு மாத கைக்குழந்தையை வைத்துக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.
இது யார் குற்றம்... மருந்து எழுதிக் கொடுத்த மருத்துவரின் குற்றமா? அல்லது மருந்தை கொடுத்த மெடிக்கல் ஷாப் ஊழியரின் குற்றமா? அல்லது அந்த மருந்ததை தயாரித்த நிறுவனத்தின் குற்றமா? ஒன்றுமே புரியவில்லை. இது குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என்ற தகவல் வேறு.
இப்படித்தான் மருந்துகள் நம்மை பாடாய் படுத்துகின்றன. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருந்துகளை போட இப்போது மிகவும் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். எங்கே நமக்கும் இதுபோல் ஆகி விடுமோ என்று அஞ்சுகின்றனர்.


எனவே தக்க மருந்துகளை தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தும்படி பிரபல மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
யார் தகுந்த மருத்துவர்; எல்லோருமே போலியாகவே உள்ளனர். என்ன மருந்து; எல்லாமே போலியாகவே உள்ளது. யார் அந்த மருந்து தயாரிப்பு கம்பெனி; எல்லாமே போலியாகவே உள்ளது.
நாட்டில் மொத்தம் 350வகையான மருந்துகளுக்கு மட்டுமே மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இப்போது 350 வகையான மருந்துகள் மட்டும்தான் உள்ளதா? ஆயிரக்கணக்கான மருந்து வகைகளை மெடிக்கல் ஷாப்பில் விற்கின்றனர். புதிது புதிதாக முளைக்கும் மருந்து நிறுவனங்கள் பல்வேறு புதிய வகை மருந்துகளை தயாரித்து லேபில் எலிகளைக் கொல்வதுபோல் மனிதர்களையும் கொன்று வருகின்றனர். இவர்களின் ஆராய்ச்சிக்கு மனிதனின் உயிர்தான் கேடயமா?
மக்களே மருந்துகளை பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்கள்.
1. அது எந்த நிறுவனத்தின் தயாரிப்பு,
2. எப்போது தயாரிக்கப்பட்டது,
3. எப்போது அதன் காலாவதி தேதி முடிவடைகிறது
4. எந்த நோய்க்கு என்ன மருந்து உபயோகப்படுத்துவது.
என்பதைப் பார்த்து உபயோகிக்கவும
Read more »

0 comments:

Post a Comment

Copyright © 2010 ஆயிஷா மைந்தன்

Template By Nano Yulianto | Page Navigation Abu Farhan