Wednesday, 27 October 2010
பயனுள்ள தகவல் - 1
Tuesday, 26 October 2010
பர்தாவை விமர்சித்த பயங்கரவாதி!
பால் தாக்கரே |
Monday, 25 October 2010
விவாதம் 1
RASMIN M.I.Sc (India)
வெட்கமில்லாமல் மீண்டும் வெற்றிக் கோஷமா?
அந்த விவாதத்தில் நடந்த நிகழ்ச்கிகளை நேற்றைய தினம் நமது இணையத்தளத்தில் தொகுத்து வழங்கியிருந்தோம்.
அல்லாஹ்வையே கிண்டலடித்துஇநபியின் வார்த்தைகளை நக்கல் செய்து கடைசி வரை ஒரு ஆதாரத்தைக் கூட வைக்க முடியாமல் கடைசியில் தலை கால் புரியாமல் உளரிக் கொட்டியதையும் நாம் தொகுத்து வழங்கியிருந்தோம்.
அத்துடன் மேற்கண்ட விவாதம் ஆகிய இரண்டு இணையத்தளங்களிலும் நேரடியாகவும் ஒளிபரப்பப் பட்டது.
களியக்காவிலையில் மூக்குடைபட்ட பின்பும் வெக்கம் கெட்டு எப்படி வெற்றி வெற்றி என்று கூச்சல் போட்டார்களோ அதே கூச்சல் மீண்டும் கேட்க ஆரம்பித்துள்ளது.
இந்த சுன்னத்தே இல்லாத ஜமாத்தைச் சோ்ந்த ஜமாலி இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்கு இப்போது மறுப்பைத் தருகிறோம்.
உளரல் இலக்கம் 01.
இதன் மூலம் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு குர்ஆனில் ஆதாரம் இல்லை. ஹதீஸில் ஆதாரம் இல்லை. சஹாபா பெருமக்களுடைய கூற்றிலும் ஆதாரம் இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிட்டார்.
அதாவது விவாதத்தில் நேரடியாக கலந்து கொண்டவர்களுக்கும் விவாதத்தை ஆண்லைன் மூலம் பார்த்தவர்களுக்கும் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியும்.
விவாதம் ஆரம்பித்ததிலிருந்து தனது கருத்துக்கு ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாமல் முழித்துக் கொண்டு உளரிக் கொட்டிய ஜமாலியிடம் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் திருமறைக் குர் ஆனிலிருந்தும் ஸஹீஹான ஹதீஸ்களிலிருந்தும் ஆதாரத்தை அடுக்கடுக்காக எடுத்து வைத்துக் கொண்டே இருந்தார்.
இந்த கோமாலி எந்த ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் தனக்குக் கிடைத்த புனிதமான சந்தர்பங்களிலெல்லாம் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் கத்திக் கொண்டிருந்தார் (வீடியோவைப் பார்ப்பவர்கள் இதனை தெளிவாக அறிய முடியும்)
விவாதத்தின் இருதியில் கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று அறிஞர்கள் யாராவது கூறியுள்ளார்களா? என்று ஜமாலி தனக்குத் தானே கேட்டுக் கொண்டிருந்தார்.
அதற்கு பதில் கொடுத்த பி.ஜெ அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் அடிப்படைக் கொள்கையை தெளிவு படுத்தினார்.
அதாவது எந்த ஒரு மார்க்க விஷயமாக இருந்தாலும் தவ்ஹீத் ஜெமாத்தைப் பொருத்தவரை அல்லாஹ் சொல்லியிருக்கிறானா? அல்லது அவனுடைய தூதர் சொல்லியிருக்கிறாரா என்றுதான் பார்ப்போமே தவிர அந்த ஸஹாபி சொன்னாரா இந்த இமாம் சொன்னாரா என்றெல்லாம் நாம் பார்ப்பதில்லை அப்படி பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
அதனால் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று எந்த இமாமோ அல்லது எந்த ஸஹாபியோ சொல்ல வேண்டும் என்று நாங்கள் பார்க்க மாட்டோம் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னால் எங்களுக்குப் போதும்.
நீங்கள் கேட்டுக் கொண்டே இருப்பதால் இதோ இப்னு குதைபாவின் கருத்தைப் பாருங்கள் என்று அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக இப்னு குதைபா அவர்கள் சொன்ன தகவலை சகோதரர் பி.ஜெ எடுத்துக் காட்டினார்.
மேலும் நாங்கள் இப்னு குதைபாவை பின்பற்றக்கூடியவர்கள் என்று வாக்குமூலமும் அளித்துவிட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
அத்துடன் நாங்கள் இப்னு குதைபாவைப் பின்பற்றக் கூடியவர்கள் என்று பி.ஜெ அவர்களே வாக்குமூலம் கொடுத்ததாகவும் இந்த அரைகுறை (ஜமாலி) எழுதியுள்ளது.
மேற்கண்ட வீடியோவில் அப்படி ஏதும் உள்ளதா பி.ஜெ அப்படி சொல்கிறாரா? வாசகர்களே இதற்கு பதில் சொல்லுங்கள்.
உளரல் இலக்கம் 03.
17.07.2010 சனி அன்று நடந்த விவாதத்தில் மௌலவி ஆ.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் எடுத்து வைத்த கருத்துக்களும் வாதங்களும் வஹ்ஹாபிகளுக்கு மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இச்செய்தி சென்னை முழுவதும் பரவியதால் விவாதத்தின் முதல் நாளில் குறைந்த எண்ணிக்கையில் வருகைதந்த வஹ்ஹாபிகள் மௌலவி ஆ.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஆ.யு அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் விவாதத்தின் இரண்டாம் நாளான 18.07.2010 ஞாயறு அன்று அதிக எண்ணிக்கையில் வந்தனர்.
ஏன் எனில் இவரின் இந்த வாதத்தைக் பாருங்கள். இந்த கோமாலி கூறிய கருத்துக்கள் தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியதாம்…………….
ஞாயிற்றுக் கிழமை நடந்த விவாதத்தை ஆன்லைனில் பார்த்தவர்கள் உண்மையைப் புரிந்திருப்பார்கள்.
சகோதரர் பி.ஜெ அவர்கள் பேசும் போதே உங்கள் வாதத்தின் லெச்சனம் தான் நெற்று உங்கள் தரப்பில் வந்த கூட்டத்தில் பாதிப்பேரை இன்று காணம்.என்று செருப்பால் அடித்ததைப் போல் உண்மை நிலையைப் போட்டு உடைத்தார்.
அதற்கு பதில் கூறிய அறிஞர்(?) கோமாலி சாஹிப் அவர்கள். தமது தரப்பு ஏன் வரவில்லை என்பதை மறந்து விட்டு எனது வாதத்திறமையைப் பார்பதற்க்காகத்தான் உங்கள் தரப்பில் மக்கள் கூட்டம் குறையாமல் வந்திருக்கிறது.என்று ஜொல்லு வடியக் கூறினார் அதைக் கேட்ட அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. (ஜமாலின்ணே என்னென்னே கேவலத்திற்கு அளவு வேனாமா?)
அடுத்துப் பேசிய பி.ஜெ அங்கிருந்த தவ்ஹீத் சகோதரர்களிடம் நீங்கள் இவரின் வாதத்திரமையைப் பார்க்கத்தான் வந்தீர்களோ என்று கேட்க இல்லவே இல்லை என்று அரங்கம் அதிரும் அளவுக்கு சப்தம் கேட்டது.
அத்துடன் இவரின் கருத்துக்களைக் கேட்க சனிக்கிழமை வந்ததை விட அதிக எண்ணிக்கையில் தவ்ஹீத் சகோதரர்கள் வந்ததாக கூறுகிறாறே விவாதத்தின் ஒப்பந்தம் என்ன என்பதே இந்த கோ……… வுக்கு தெரியவில்லை.
அதாவது விவாதத்திற்கு நேரடி பார்வையாளர்களாக ஒவ்வொரு தரப்பிலும் 150 பேர்கள் வீதம் மொத்தமாக 300 பேர்கள் மாத்திரமே கலந்து கொள்ள வேண்டும்.அதற்கு அதிகமாக வருபவர்கள் யாரும் விவாத அரங்கில் அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்பது விவாத ஒப்பந்தத்தில் குறிப்பிடபட்டுள்ள விதி.
இதை மீறி இந்த கோ……..வின் வாதத்தைக் கேட்க கூட்டம் அதிகமாக வந்ததாம்.
பொய் சொல்ல ஒரு அளவு வேனாமா?
அன்பின் ஜமாலி அவர்களே பொய் சொல்பவனுக்கு அதிகம் ஞாபக சக்தி வேண்டும் இல்லையேல் உங்கள் கதை தான்.
விவாதத்தில் ஒரு ஆதாரத்தைக் கூட எடுத்துவைக்க திரானியற்ற (கோ)மாலி விவாதம் முடிந்ததும் தவ்ஹீத் ஜமாத் அறிஞா்களும் பெரும்பாலான பார்வையாளா்களும் அரங்கை விட்டு வெளியேறியதும். அங்கும் அந்த கேடு கெட்டவா்கள் மவ்லிதை ஓதினார்கள்.
உடனே இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமைக்கு தெரியப் படுத்தப்பட்டுதவ்ஹீ்த் ஜமாத் இந்த கேடு கெட்ட வேலையை கண்டித்ததுடன் கலைந்து சென்றது அந்தக் கூட்டம்.
அவர்களிடம் (இது பற்றிக்) கேட்டால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசினோம் என்று கூறுவார்கள். அல்லாஹ் வையும் அவனது வசனங்களையும் அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்? என்று கேட்பீராக!(9:65)
விவாதம் 3
இதில் சுன்னத் ஜமாத் ஐ.பேரவை சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களும் கலந்து கொண்டு விவாதித்தார்கள்.
சுன்னத் ஜமாத் ஐ.பேரவையின் நிலைபாடு :
சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் அசிங்கங்களும் குர்ஆன் ஹதீஸிற்க்கு மாற்றமான கருத்துக்களும் இருக்கின்றன.
தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு :
சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் எந்தவொரு அசிங்கங்களோ குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான கருத்துக்களோ இல்லையென்பதும்.ஷேக் அப்துல்லாஹ் மற்றும் அவரால் ஒப்புக் கொள்ளப் பட்டவர்களின் பேச்சுக்கள் எழுத்துக்கள் தப்ஸீர்கள் ஆகியவற்றில் தான் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமான கருத்துக்களும் கயமைகளும் பொய்களும் ஆபாசங்களும் நிறைந்துள்ளன.
விவாதத்தின் ஆரம்பமும் அரண்டு போன ஜமாலியும்.
விவாதம் ஆரம்பிப்பதற்காக இரு தரப்பு நடுவர்கள் சார்பாகவும் நாணயச் சுழற்சி மேற் கொள்ளப்பட்டது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தவ்ஹீத் ஜமாத் தரப்பால் சகோதரர் பி.ஜெ தனது வாதத்தை ஆரம்பித்தார்.
பொய்களின் மொத்த உருவம் ஜமாலி.
விவாதத்தின் ஒப்பந்தப் படி ஜமாலியினதும் அவரால் ஒப்புக் கொள்ளப் பட்டவர்களினதும் ஆபாசமான அசிங்கமான முன்னுக்குப் பின் முரனான கருத்துக்களை சகோதரர் பி.ஜெ பட்டியலிட ஆரம்பித்தார்.
முதலாவதாக அபூதாலிப் முஸ்லிம் என்று ஓரிடத்திலும் இன்னோரிடத்தில் அபூதாலிம் காபிர் என்றும் ஜமாலி பேசிய இரண்டு வீடியோ ஆதாரங்களை திரையில் போட்டுக் காட்டினார் சகோதரரர் பி.ஜெ அவர்கள்.
இடத்திற்கு தகுந்தால் போல் பேசுவதில் இவர் வல்லவர் என்பதற்கு எடுத்துக் காட்டப்பட்ட இந்த வீடியோவில் அபூதாலிப் முஸ்லிம் என்பதற்கு இப்னு அஸாகீர் நஸயீ அபூதாவுத் ஆகிய கிரந்தங்களில் இருந்து ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டி அதன் ஒரு பகுதியை சொல்லி மறு பகுதியை மறைத்திருந்தார்.
அந்த ஹதீஸின் இரண்டாம் பகுதியே அபூதாலிப் அவர்கள் காபிர் தான் என்பதற்கு சான்றாக இருந்தது.
மீதியை ஏன் மறைத்தீர்கள் மக்கள் மத்தியில் ஏன் இப்படி பொய்களையும் புரட்டுகளையும் பறப்புகிறீர்கள் என்று விவாதத்தின் இருதிவரைக் கேட்டும் இந்தக் கேள்விக்கு ஜமாலி பதிலே தரவில்லை.
முதல் வாதத்திலேயே உளற ஆரம்பித்த ஜமாலி.
பி.ஜெவின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் ஆபாசங்கள் அசிங்கங்கள் இருக்கிறது என்று வாதிட வந்த ஜமாலி அவர்கள்.முதல் வாதத்திலேயே தலைபிற்கு கொஞ்சம் கூட சம்பந்தமின்றி பேச ஆரம்பித்தார்.
பி.ஜெ ஆண்கள் தொடையை மறைக்க வேண்டும் என்று கூறினார்.தற்போது ஆண்கள் தொடையை திறந்து கொள்ள அனுமதியுண்டு என்று கூறுகிறார் இது அவர்களது வெளியீடுகளில் உள்ள அபத்தம் என்று முதல் வாதத்தையும் கலாலா தொடர்பாக சகோதரர் பி.ஜெ அவர்களின் திருக்குர் ஆன் மொழியாக்கத்தில் 4வது அத்தியாயம் 12வது வசனத்திற்கு கொடுத்த விளக்கத்தினை அரைகுறையாக வாசித்துவிட்டு அதில் தவறு உண்டு என்று தனது இரண்டாவது வாதத்தையும் முன்வைத்தார்.
முரண்பாடு என்றால் என்னவென்று ஜமாலிக்கு பாடம் நடத்திய பி.ஜெ
விவாதம் ஆரம்பித்த அடுத்த கணமே உளறுவதற்கும் ஆரம்பித்தார் ஜமாலி இருந்தாலும் அவருடைய உளறளுக்கும் விவாதம் என்பதால் பதில் கொடுக்க வேண்டியது பி.ஜெயின் கடமை என்பதால் முதலில் முரண்பாடு என்றால் என்ன என்று விளக்கம் சொன்னார்.
ஒருவர் ஆரம்பத்தில் ஒரு கருத்தை சொல்லிவிட்டு பிறகு தான் சொன்ன கருத்து தவறு தற்போது திருத்திக் கொண்டு இந்தக் கருத்துக்கு வந்துவிட்டேன் என்று அறிவித்து விட்டு முதலாவது கூறிய கருத்துக்கு மாற்றமாக கருத்துச் சொன்னால் அதற்குப் பெயர் முரண்பாடு அல்ல திருத்தம் என்பதை கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல் பாடமாக நடத்திக் காட்டினார் சகோதரர் பி.ஜெ அவர்கள்.
இதே நேரம் ஜமாலியைப் போல் ஒரு மேடையில் ஒரு கருத்தையும் இன்னொரு மேடையில் அதற்கு மாற்றமாக இன்னொரு கருத்தையும் சொல்லிவிட்டு மக்கள் மத்தியில் ஒரு கொள்கையற்றவனாக தன்னை காட்டிக் கொள்வதென்பது மூடத்தனம் கயமைத்தனம் பித்தலாட்டம் முரண்பாடு என்பதையும் மிக அழகாக விளக்கிச் சொன்னார்.
கிழித்தெறியப் பட்ட மத்ஹபு குப்பைகளும் மாட்டிக் கொண்ட ஜமாலியும்.
ஜமாலியுடையவும் அவர் ஆதரிப்பவர்களினதும் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் இருக்கும் முரண்பாடுகளையும் ஆபாசங்களையும் கயமைத்தனங்களையும் பட்டியலிட ஆரம்பித்தார் பி.ஜெ
ஆனால் சகோதரர் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்ட ஒரு கேள்விக்குக் கூட ஜமாலியினால் இறுதி வரை பதில் தரவே முடியவில்லை.
ஹனபி மற்றும் ஷாபி போன்ற மத்ஹபுகளில் ஒரு சாதாரண மனிதன் கூட நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசங்களும் அபத்தங்களும் கயமைகளும் நிறைந்துள்ளதை சகோதரர் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்டு சொன்னார்.
1.தானாக காற்றை விட்டு தொழுகைகளை முடிக்கலாம்.
2.கிழக்கிலிருக்கும் ஒருவரும் மேற்கில் இருக்கும் இன்னொருவரும் திருமணம் முடிக்கலாம்.அப்படி முடித்து ஆறு மாதத்தில் மனைவி பிள்ளை பெற்றால் அதனை குறை சொல்ல முடியாது ஏனெனில் கராமத்தின் மூலம் அவன் அவளிடத்தில் வந்து போயிருக்கக் கூடும்.
3.ஹஜ்ஜுடைய நேரத்தில் மனைவி தவிர யாரோடு வேண்டுமானாலும் உடலுறவு கொண்டாலும் ஹஜ் முறியாது.
4.ஹஜ்ஜுடைய காலத்தில் கழுதையுடன் புணர்வது பெண்ணின் ஹஜ்ஜை முறிக்கும் ஆணின் ஹஜ்ஜை முறிக்காது.
5.சிறுமியுடன் விபச்சாரம் செய்தால் தண்டனையில்லை.(மத்ஹபு நூல்கள் அதற்காக சொல்லும் காரணங்களை விவாதத்தில் பார்த்துக் கொள்ளவும்.)
6.ஊமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் தண்டனை இல்லை
7.விபச்சாரம் செய்துவிட்டு பணம் கொடுத்துவிட்டால் அதற்கு தண்டனை இல்லை.
8.பைத்தியத்துடன் விபச்சாரம் செய்தால் தண்டனை கிடையாது.
9.வெளிநாட்டுக் காபிர் உள்நாட்டு முஸ்லிம் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் காபிருக்கு தண்டனை கிடையாது.
10.ஒரு பெண்ணை கண்ணியா இல்லையா என்று கண்டுபிடிக்க அவளை சுவற்றில் சிறு நீர் கழிக்கச் செய்ய வேண்டும்.அது சுவற்றில் படுகிறதா? இல்லையா? என்பதை வைத்து அவள் கண்ணியா? இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.என்ற கேவலமான வழிமுறைகள்.
11.விபச்சாரம் செய்து மாட்டிக் கொண்டவன் விபச்சாரியை மனைவி என்று சொல்லிவிட்டால் தண்டனை இல்லை.
12.தனது மர்ம உருப்பை தன்னுடைய பின் துவாரத்தில் நுழைத்தால் அவனுக்கு சட்டம் என்ன? என்று அதற்கு சட்டம் தொகுத்துள்ள மத்ஹபுவாதிகள்.
13.தான் திருமணம் செய்த மனைவியுடன் இரவில் உணர்ச்சியுடன் நெருங்கும் போது அவளுடைய மகளின் மீது தவறுதலாக கை பட்டுவிட்டால் மனைவிக்கும் கணவனுக்கும் உள்ள திருமன உறவு நீங்கிவிடும்.
14.இரண்டு பேர் திருடச் சென்று ஒருவன் உள்ளே சென்று திருடிவிட்டு வெளியிலிருப்பவனுக்கு அதனை கொடுத்தால் இருவருக்கும் தண்டனை இல்லை.(உள்ளே போனவன் திருடியதை வெளியில் கொண்டுவரவில்லை வெளியில் இருந்தவன் உள்ளே போய் திருடவில்லை இதுதான் மத்ஹபின் விளக்கமாம்.)
15.தூங்கி எழுந்ததும் பல் துலக்கும் போது முதலாவது வரும் எச்சிலை விழுங்கிவிட வேண்டும்.
16.ஹஜ்ஜின் போது சுய இன்பம் செய்தால் அது ஹஜ்ஜை பாதிக்காது.
17.தொழ வைத்த இமாமையே குர்பானி கொடுக்களாம்.
18.சிறிதளவு கஞ்சா அடிக்கலாம்.
19.குழந்தையை கடத்தியவனுக்கு தண்டனை இல்லை.
20.பல் துலக்கும் போது தனது இரண்டு கைகளிலும் உள்ள ஆட்காட்டி விரல்களைக் கொண்டு ஒரே நேரத்தில் பல் துலக்க வேண்டும்.
மத்ஹபில் உள்ள குப்பைகள் பட்டியல் போட்டு எடுத்துக் காண்பித்தார் சகோதர் பி.ஜெ அந்த அசிங்கங்களுக்கு விவாதத்தின் இறுதி வரை எந்த ஒரு பதிலையும் தராது தனது தோல்வியை ஒத்துக் கொண்டு அமைதி காத்தார் ஜமாலி.
கழுதையுடன் புணருவது தொடர்பான மத்ஹபு குப்பைகளை பி.ஜெ அவர்கள் எடுத்துக் காட்டும் போது மத்ஹபு தொடர்பாக எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாத ஜமாலி இதற்கு மட்டும் நபியவர்கள் சொன்னதாக ஒரு ஹதீஸை சொன்னார்.
அதாவது :
யார் மிருகத்துடன் புணர்கிறானோ அவனுக்கு தண்டனை இல்லை. என்று நபியவர்கள் கூறிய செய்தி திர்மிதியில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக பொய் சொன்னார் ஜமாலி.
அப்படி ஒரு ஹதீஸே இல்லை இருந்தால் திர்மிதியில் இருந்து எடுத்துக் காட்டுங்கள்.என்று சவால் விட்டார் பி.ஜெ ஆனால் நபியின் மீது பொய் சொன்ன பொய்யர் ஜமாலி இருதிவரை அப்படி ஒரு ஹதீஸைக் காட்டவே இல்லை.
ஜமாலி நபியவர்கள் மீது துணிந்து இட்டுக் கட்டிய பொய்கள்.
அபூதாலிப் முஸ்லிம் என்று நபியவர்கள் கூறியதாக இப்னு அஸாகீரில் உள்ளதாக குறிப்பிட்டார் ஜமாலி ஆனால் இப்னு அஸாகீரில் உள்ள செய்தியோ அபூதாலிப் காபிர் என்பதைத் தான் குறிப்பிடுகிறது.
நபியவர்கள் அபூதாலிபை காபிர் என்று எந்த ஹதீஸில் சொன்னாரோ அதே ஹதீஸின் ஒரு பகுதியை மறைத்து அபூதாலிப் முஸ்லிம் என்று நபியவர்கள் கூறியதாக நபியின் மீதே பொய் சொன்னார் ஜமாலி.
இது தொடர்பாக அபூதாவுத் நஸாயி போன்ற கிரந்தங்களிலும் ஹதீஸ் வருவதாக சொன்னவர் கடைசி வரை ஹதீஸைக் காட்டவே இல்லை.
புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களிலும் அபூதாலிப் முஸ்லிம் என்பதற்கான ஆதாரம் இருப்பாக சொன்னார் ஜமாலி ஆனால் அதற்கு மாற்றமாக அபூதாலிப் காபிர் என்பதற்கான ஆதாரம் தான் புகாரி முஸ்லிமில் உள்ளது.
வுழூ செய்யும் போது வாய்ப் பகுதியை மூன்று முறை தனியாகவும் மூக்கை மூன்று முறை தனியாகவும் நபியவர்கள் கழுவியதாக புகாரியை ஆதாரம் காட்டி பொய் சொன்னார்.
பெண்கள் ஜும்மாத் தொழுகைக்கு வரக்கூடாது என்று நபியவர்கள் சொன்னதாக முஸ்லிமில் ஹதீஸ் இருக்கிறது என்று இல்லாத ஹதீஸை இருப்பதாக நபியவர்கள் மீது இட்டுக் கட்டினார்.
பெருநாள் முடிந்து இரண்டு நாட்கள் வரை குர்பானி கொடுக்களாம் என்ற நபியவர்கள் கூறியதாக முஅத்தாவில் ஹதீஸ் இருப்பதாக இல்லாத செய்தியை நபியவர்கள் மீது துணிந்து இட்டுக்கட்டினார்.
யார் என்மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்ளட்டும் (முஸ்லிம்)
என்ற நபி மொழியை எடுத்துக் காட்டி இந்த ஹதீஸிற்கு ஏற்றாட் போல் உங்கள் வாதம் உள்ளது என்பதை பி.ஜெ அவர்கள் விவாதக் கலத்திலேயே ஜமாலியிடம் தெரிவித்தார்.
தண்டவாளம் ஏறியது ஜமாலியின் வண்டவாளம்.
விவாதத்தில் தவ்ஹீத் ஜமாத் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக செயல்படுகிறது என்று வாதிட வந்த ஜமாலியின் முரண்பட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் வீடியோ காட்சியாக போட்டுடைத்தார் பி.ஜெ
அதாவது கூட்டத்திற்கு தகுந்தாற் போல் இடத்திற்கு ஏற்றாற் போல் பேசுவதில் வல்லவரான ஜமாலி ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு தில்லு முல்லு வேலைகளை செய்வார்.
அவை வீடியோவாக அரங்கத்தில் போட்டுக் காட்டப்பட்டு அவரிடமே விளக்கம் கேட்கப் பட்டது.
விவாதம் செய்வாதாக அரங்கத்திற்கு வந்தவர் மதில் மேல் குந்திய பூனை போல் இருதி வரை உளரிக் கொட்டிக் கொண்டே இருந்தார்.
அரங்கத்தில் போடப்பட்ட ஜமாலியின் ஒன்றுக் கொன்று முரண்பட்ட வீடியோக்கள் தலைப்பு வாரியாக.
மார்க்க விஷயத்தில் பித்அத் புதிதாக ஒன்றும் உருவாகாது ஆனால் உலக விஷயத்தில் உருவாகும் (வாகனங்கள் நாம் பயன் படுத்தும் பொருட்கள்) என்று ஓரிடத்தில் பேசிய ஜமாலி இன்னோரிடத்தில் தான் சொன்னதை தானே மறுத்துப் பேசிய காட்சி போட்டுக் காட்டப் பட்டது.
அபூதாலிப் முஸ்லிம் என்று ஒரு மேடையிலும் அவர் காபிர் தான் என்று இன்னொரு மேடையிலும் ஜமாலி பேசிய வீடியோ அரங்கத்தினர் மத்தியில் போட்டுக் காண்பிக்கப் பட்டது.
இறைவன் அர்ஷில் இருக்கிறான் என்று ஒரு மேடையிலும் அர்ஷில் இல்லை என்று இன்னொரு மேடையிலும் ஜமாலி பேசிய காட்சி எடுத்துக் காண்பிக்கப் பட்டது.
ஒரு விஷயம் இல்லை என்பதற்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை என்று தமிழகத்திலும் இல்லை என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் என்று இலங்கையிலும் ஜமாலி பேசிய வீடியோ போடப்பட்டு முரண்பாட்டிட்கு விளக்கம் கோறப்பட்டது.
மார்க்க விஷயத்திற்கு சவூதி ஆதாரமாகாது என்று ஒரு வீடியோவிலும் ஆதாரமாகும் என்று இன்னோர் வீடியோவிலும் தனக்குத் தானே முரண்பட்ட காட்சி அரங்கத்தினர் முன்னிலையில் போடப்பட்டது.
தவ்ஹீத் வாதிகள் மதிக்கும் அறிஞர்களை மரியாதையாக தான் பேசுவதாக குறிப்பிட்ட ஜமாலியிடம் இப்னு தைமிய்யா அவர்களை அவன் இவன் என்று ஜமாலி பேசிய காட்சி எடுத்துக் காண்பிக்கப் பட்டது.
இறைவனுக்கு உருவம் உண்டு என்று இப்னு தைமிய்யா கூட கூறவில்லை என்று கடந்த விவாதத்தில் வாதித்தவர் இப்னு தைமிய்யா இறைவனுக்கு உருவம் உண்டு என்று கூறினார் என இப்னு தைமிய்யாவை மேடையில் வைத்து வசை பாடும் காட்சி போட்டுக் காண்பிக்கப் பட்டது.
இப்படி தனக்குத் தானே ஜமாலி அவர்கள் முரண்பட்டு பேசிய விடியோக்கள் அரங்கத்தில் திரையில் போட்டுக் காண்பிக்கப்பட்டது.
அந்த வீடியோக்களை பார்த்தவுடன் அவர்கள் தரப்பு மக்களே ஜமாலி யார் என்பதை தெளிவாக புரிந்து கொண்டார்கள்.
போடப்பட்ட எந்த ஒரு வீடியோவுக்கும் பதில் தர முடியாமல் திண்டாடினார் ஜமாலி.
பி.ஜெ விட்ட சவாலும் விரண்டோடிய ஜமாலியும்.
மத்ஹபு நூல்களில் உள்ள ஆபாசங்களையும் அசிங்கங்களையும் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்ட போது அதில் உள்ள அசிங்கங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேச திராணியற்றுப் போன ஜமாலி இப்படியெல்லாம் அசிங்கங்களை இவர்கள் வாசித்துக் காட்டுகிறார்கள் என்று நீழிக் கண்ணீர் வடித்தார்.
அப்போது பி.ஜெ அவர்கள் அவரிடத்தில் மத்ஹபில் உள்ள அசிங்கத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து அசிங்கம் இல்லாமல் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போல் நீங்கள் இதை தைரியம் இருந்தால் படித்துக் காட்டுங்கள் என்று சவால் விட்டார்.
ஆனால் விவாதத்தின் இருதி வரை அதை அவர் படிக்கவே இல்லை.
அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.
அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களால் ஊதி அணைத்துவிட நினைக்கிறார்கள்.தன்னை மறுப்போர் வெறுத்த போதும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.(61:8)
Thursday, 21 October 2010
விவாதம்
சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவையுடன் 3 வது தலைப்பில் சென்னையில் விவாதம் நடைபெறவுள்ளது.
நாள்- அக்டோபர் 23, 24
தலைப்பு :
தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு:
ஷேக் அப்துல்லாஹ் மற்றும் அவரால் ஒப்புக்கொள்ளப்பட்டவர்களின்
பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் ஆபாசங்கள், கயமைகள் உள்ளன
சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை நிலைபாடு:
பி.ஜே தர்ஜுமாவில் அசிங்கங்கள் உள்ளது.
பால்தாக்கரே
பால்தாக்கரேக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதே இந்துத்துவாவினரின் வேலையாகிவிட்டது. அவ்வப்போது இஸ்லாத்திற்கும் , முஸ்லிம்களுக்கும் எதிராக ஏதாவது ஒன்றைக் கூறி அமைதியைக் கெடுத்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்துவதே இந்துத்துவாவினரின் ஒரே குறிக்கோளாகும்.
இந்த அடிப்படையில்தான் அடுத்த சர்ச்சையை இந்துத்துவா வெறியன் சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே கிளப்பியுள்ளார்.
முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பால்தாக்கரே தமது கட்சி ஏடான சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளார். பர்தாவை தடைசெய்ய வேண்டும் என்பதற்கு பால்தாக்கரே கூறியுள்ள காரணம்தான் முட்டாள்தனமானதாகும்.
சாந்தாகுரூசில் வி.என்.தேசாய் மாநகராட்சி மருத்துவமனையில் பிறந்து இரண்டு மாதமே ஆன ஆண்குழந்தையை கடந்த பதினைந்தாம் தேதி பர்தா அணிந்த ஒரு பெண் திருடிச் சென்று விட்டாராம் . இதன் காரணமாகத்தான் திருட்டிற்குப் பயன்படும் பர்தா எனும் ஆடையை தடைசெய்ய வேண்டும் என்ற அறிவுப்பூர்வமான(?) காரணத்தை பால்தாக்கரே கூறியுள்ளான்.
பர்தாவை தடைசெய்ய வேண்டும் என்பதற்கு பால்தாக்கரே கூறியுள்ள காரணம் மிகவும் முட்டாள்தனமானதாகும். பர்தா என்பது பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் தரக்கூடிய ஒரு ஆடையாகும். இந்த கண்ணியமிக்க ஆடையை அணிந்து ஒருவர் ஒரு தவறை செய்து விட்டால் அந்த ஆடையையே தடைசெய்ய வேண்டும் என்பது முட்டாள்தனமானதாகும்.
எத்தனையோ பேர் போலீஸ் அதிகாரி போல் சீருடை அணிந்து மக்களை ஏமாற்றி பலகேடுகெட்ட காரியங்களைச் செய்கின்றனர். மேலும் வங்கி அதிகாரிகளைப் போல் சீருடை அணிந்து மிகப் பெரும் மோசடியில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் கூட வருமான வரித்துறை அதிகாரிகளைப் போல் நடித்து ஒரு வீட்டில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது பத்ரிகைகளில் பரபரப்பான செய்தியாக வெளிவந்துள்ளது.
பல்வேறு துறைகளில் உள்ளவர்களின் சீருடைகளை அணிந்து சமூகவிரோதிகள் பல்வேறு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அனைத்து சீருடைகளையும் தடை செய்ய வேண்டுமென்று பால்தாக்கரே கூறுவரா?
காவியாடை அணிந்து எத்தனையோ பேர் காமலீலைகளில் ஈடுபட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்டு ஊடகங்களால் கேவலப்படுத்தப்படுகின்றனர். எனவே காவியாடை அணிவதற்கு தடைவிதிக்க வேண்டுமென்று பால்தாக்கரே கூறுவாரா?
பர்தா என்ற கண்ணியமிக்க ஆடையை அணிவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கூறுவதின் மூலம் அமைதியாய் உள்ள முஸ்லிம் சமுதாயத்தை தூண்டிவிட்டு பெரும் கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்பதே பால்தாக்கரே போன்ற இந்துத்துவவாதிகளின் நோக்கமாகும்.
எனவே இதுபோன்ற சமூகவிரோத கருத்துக்களைத் தெரிவித்து முஸ்லிம்களின் கோபத்தை தூண்டும் பால்தாக்கரே மீது மத்திய அரசும், மகராஷ்டிர மாநில அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் இந்திய அளவில் முஸ்லிம்கள் மாபெரும் போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறோம்.
இப்படிக்கு
ஆர் ரஹ்மதுல்லாஹ்
மாநிலத் துணைத் தலைவர்
ஹஜ்
அமல்களில் சிறந்தது
“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 26
பெண்களின் ஜிஹாத்
“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகின்றோம். எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. எனினும் (பெண்களுக்கு) சிறந்த ஜிஹாத், பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்” என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1520
அன்று பிறந்த பாலகர்
“உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1521
சுவனமே பரிசு
“ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1773
தவிடுபொடியாகும் தவறுகள்
அல்லாஹ் என்னுடைய உள்ளத்தில் இஸ்லாத்தை அருளிய போது நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் நான் உடன்படிக்கை செய்வதற்காக உங்கள் வலது கையை விரியுங்கள்” என்று கூறினேன். அவர்கள் தன் கையை விரித்து எனது கையைப் பிடித்துக் கொண்டு, “அம்ரே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நிபந்தனை விதிக்கப் போகின்றேன்” என்று கூறினேன். “என்ன நிபந்தனை விதிக்கப் போகின்றாய்?” என்று கேட்டார்கள். “எனக்கு மன்னிக்கப்பட வேண்டும்” என்று நான் பதிலளித்தேன். “அம்ரே! நிச்சயமாக இஸ்லாம் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹிஜ்ரத் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹஜ் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது என்று உனக்குத் தெரியாதா?” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 173, இப்னுகுஸைமா
சிறப்பு விருந்தினர்
“அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர், ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவன் அவர்களை அழைத்தான். அவர்கள் பதிலளிக்கின்றனர். அவனிடம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அவன் வழங்கி விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2884
இஹ்ராமின் போது இறந்தவர் தல்பியா சொல்லி எழுவார்
(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர் தனது வாகனத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். அது அவரது கழுத்தை முறித்து விட்டது. (அவர் இறந்து விட்டார்) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரு ஆடைகளால் கஃபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது தலையை மறைக்கவும் வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப் படுவார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1266, முஸ்லிம் 2092
ரமளானில் ஒரு ஹஜ்
உம்மு ஸினான் என்றழைக்கப்படும் அன்சாரிப் பெண்ணை நோக்கி, “நீ என்னுடன் ஹஜ் செய்வதற்குத் தடையாக அமைந்தது எது?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “எங்களிடம் தண்ணீர் கொண்டு வருவதற்கான இரண்டே இரண்டு ஒட்டகங்கள் தான் உள்ளன. ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் சென்றுள்ளனர். நாங்கள் (இங்கே தண்ணீர் எடுத்துச்) செல்வதற்காக இன்னோர் ஒட்டகத்தை இங்கே எங்களுக்காக விட்டுச் சென்றிருக்கின்றனர்” என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரமளான் மாதம் வந்ததும் நீ உம்ரா செய்! ஏனெனில் ரமளானில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 2201
அரஃபா நாள் – மலக்குகளிடம் அல்லாஹ் பெருமிதம்
“பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக நிற்கும் எனது அடியார்களைப் பாருங்கள்” என்று அரஃபா பெருவெளியில் நிற்கும் மக்களைப் பற்றி மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் 7702
ஒன்பதாம் நாள் விடுதலை நாள்
அரஃபா நாளை விட வேறெந்த நாளிலும் அல்லாஹ் அடியானை அதிகமாக நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை. (அந்நாளில்) அவன் நெருங்கி வந்து இந்த அடியார்கள் என்னை விரும்புகின்றார்கள் என்று சொல்லி மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 2402
அரஃபா நாளின் துஆவே சிறந்த துஆவாகும்
துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும். நானும் எனக்கு முந்தைய நபிமார்களும் சொன்னதில் சிறந்தது, “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு ஹுல்ல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்’ ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரலி),
நூல்:திர்மிதி3509
அரஃபா நோன்பு (ஹாஜி அல்லாதோருக்கு)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாதத்தில் மூன்று (நாட்கள் நோன்பு நோற்பது)ம், ரமளானுக்கு ரமளான் நோன்பு நோற்பதும் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றது போலாகும். அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆஷுரா நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு பாவத்திற்குப் பரிகாரமாக அமையும் என அல்லாஹ்வின் மீது நான் ஆதரவு வைக்கின்றேன்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம் 1976
சிறியவரின் ஜிஹாத் – ஹஜ்
முதியவர், சிறியவர், பலவீனமானரின் ஜிஹாத் ஹஜ்ஜும் உம்ராவும் ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ 2579
தல்பியாவின் சிறப்பு
எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள், மரங்கள், களிமண் கட்டிகள் யாவும் தல்பியா கூறுகின்றன. இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை பூமி முழுவதும் உள்ளவைகளும் இவ்வாறு தல்பியா கூறுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்: திர்மிதீ 758
தவாஃபின் சிறப்பு
யார் கஅபாவை வலம் வந்து இரு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவர் ஓர் அடிமையை உரிமை விட்டவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2947
சாட்சி சொல்லும் ஹஜருல் அஸ்வத்
கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும் பேசும் நாவுகள் கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை எழுப்புவான். யார் இதை முத்தமிட்டாரோ அவருக்காக அது சாட்சி கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதீ 884
மழித்துக் கொள்பவருக்கு மன்னிப்பு
நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது தலையை மழித்தார்கள். அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், “முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1727
ஜம்ஜமின் சிறப்பு
அது (ஜம்ஜம் நீர்) பரக்கத் செய்யப் பட்டதாகும். உண்ணுபவருக்கு உணவாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் 4520
மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவதன் சிறப்பு
மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது அது அல்லாததில் (மற்ற பள்ளிகளில்) ஒரு லட்சம் தொழுவதை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: அஹ்மத் 14167, இப்னுமாஜா 1396
மஸ்ஜிதுந்நபவீயில் தொழுவதன் சிறப்பு
மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட
எனது பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1190
மஸ்ஜிதுல் குபாவில் தொழுவதன் சிறப்பு
யார் தனது வீட்டில் உளூச் செய்து மஸ்ஜிது குபாவுக்கு வந்து அதில் ஒரு தொழுகை தொழுகின்றாரோ அவருக்கு உம்ரா செய்த கூலி உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஹனீஃப் (ரலி), நூல்: இப்னுமாஜா 1406, நஸயீ 692
Saturday, 16 October 2010
சென்னை
உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் சென்னை உள்ளிட்ட 3 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியா மாநிலங்களிலேயே சந்தைக்கு உகந்த, வணிகச் சூழல் நிறைந்த மாநிலமாக குஜராத் திகழ்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரபல அமெரிக்கப் பத்திரிகையான போர்ப்ஸ் இதழ் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் சக்திவாய்ந்த நகராக நியூயார்க்கோ அல்லது மும்பையோ இருக்கப் போவதில்லை என்றும் சீனாவின் சோங்கிங், சிலியின் சாண்டியாகோ, டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் போன்ற நகரங்களே இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நியூயார்க், லண்டன், பாரீஸ், ஹாங்காங் மற்றும் டோக்யோ ஆகிய உலக மையங்களில் இருந்து சிறிய நகரங்களுக்கு உலகின் கவனம் திரும்பும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் சிறப்பான திட்டமிடலால் சீனாவின் உள்பகுதியில் உள்ள நகரங்கள் போக்குவரத்து வசதிகள் உள்ளவையாகவும் வணிகம் செய்ய ஏற்றவையாகவும் இருப்பதாகக் கூறியுள்ள போர்ப்ஸ், இந்தியா இத்தகைய திட்டமிடல் எதையும் செய்யவில்லை என்றாலும் சீனாவைப் போன்றே சிறிய நகரங்களின் வளர்ச்சி இருக்கிறது என்றும் கூறியுள்ளது.
இன்போசிஸ் மற்றும் விப்ரோவின் தலைமையகங்கள் அமைந்துள்ள பெங்களூரு, இந்தியர்களின் சராசரி வருமானத்தைவிட இருமடங்கு வருமானம் உடைய அஹமதாபத், நடப்பாண்டில் 1 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ள சென்னை ஆகிய நகரங்கள் இந்திய நகரங்களில் முக்கியத்துவம் பெற்றவையாகும். இந்தியாவின் முக்கியத் தொழில் துறைகளான வாகன உற்பத்தி, மென்பொருள் உற்பத்தி மற்றும் பொழுது போக்கு ஆகியவை இம்மூன்று நகரங்களில் உள்ளதாகவும் போர்ப்ஸ் கூறியுள்ளது.
2025ஆம் ஆண்டு 1 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சென்னை, நடப்பாண்டில் இதுவரை 1 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. டில்லி, மும்பை உள்ளிட்ட மற்ற இந்திய நகரங்களைவிட இது அதிகம் என்று போர்ப்ஸ் கூறியுள்ளது.
இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழில்துறைகளை சென்னை தனதாக்கிக் கொண்டுள்ளது. குறிப்பாக வாகன உற்பத்தித் துறை. டெல், நோக்கியா, மொட்டோரேலா, சாம்சாங், சீமன்ஸ், சோனி மற்றும் பாக்ஸ்கான் ஆகிய எலக்ட்ரானிக் நிறுவனங்களும் வளர்ந்து வருகிறது. பொழுதுபோக்குத் துறையில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் போர்ப்ஸ் கூறியுள்ளது.
Friday, 15 October 2010
a
Obtain:
* Birth Certificate
* Caste Certificate
* Tribe Certificate
* Domicile Certificate
* Driving Licence
* Marriage Certificate
* Death Certificate
* Search More - How do I
Apply for:
* PAN Card
* TAN Card
* Ration Card
* Passport
* Inclusion of name in the Electoral Rolls
* Search More - How do I
Register:
* Land/Property
* Vehicle
* With State Employment Exchange
* As Employer
* Company
* .IN Domain
* GOV.IN Domain
* Search More - How do I
Check/Track:
* Waiting list status for Central Government Housing
* Status of Stolen Vehicles
* Land Records
* Causelist of Indian Courts
* Court Judgements (JUDIS )
* Daily Court Orders/Case Status
* Acts of Indian Parliament
* Exam Results
* Speed Post Status
* Agricultural Market Prices Online
* Search More - How do I
Book/File/Lodge:
* Train Tickets Online
* Air Tickets Online
* Income Tax Returns
* Complaint with Central Vigilance Commission (CVC)
· Search More - How do I
Contribute to:
* Prime Minister's Relief Fund
* Search More - How do I
Others:
* Send Letters Electronically
* Search More - How do I
Recently Added Online Services
* Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages
* Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu
* Tamil Nadu: View Water shed Atlas of Tamil Nadu
* Tamil Nadu: E-Pension District Treasury Tirunelveli
* Meghalaya: Search Electoral Roll Online by Name (2008)
* Meghalaya: Search Electoral Roll Online by EPIC number (2008)
* Meghalaya: Search Electoral Roll Online by House number (2008)
* Himachal Pradesh: Revised Pay and Arrears Calculator-Fifth Pay
* Meghalaya: Search Electoral Roll Online by Part number (2008)
* Andhra Pradesh: Online Motor Driving School Information
Global Navigation
* Citizens
* Business (External website that opens in a new window)
* Overseas
* Government
* Know India
* Sectors
* Directories
* Documents
* Forms
* Acts
* Rules
* Schemes
* Tenders
* Home
* About the Portal
* Site Map
* Link to Us
* Suggest to a Friend
* Help
* Terms of Use
* Feedback
* Contact Us
* Accessibility Statement