Saturday, 16 October 2010
சென்னை
Posted by
தமிழ் தாவா | Saturday, October 16, 2010
உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் சென்னை உள்ளிட்ட 3 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியா மாநிலங்களிலேயே சந்தைக்கு உகந்த, வணிகச் சூழல் நிறைந்த மாநிலமாக குஜராத் திகழ்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரபல அமெரிக்கப் பத்திரிகையான போர்ப்ஸ் இதழ் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் சக்திவாய்ந்த நகராக நியூயார்க்கோ அல்லது மும்பையோ இருக்கப் போவதில்லை என்றும் சீனாவின் சோங்கிங், சிலியின் சாண்டியாகோ, டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் போன்ற நகரங்களே இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நியூயார்க், லண்டன், பாரீஸ், ஹாங்காங் மற்றும் டோக்யோ ஆகிய உலக மையங்களில் இருந்து சிறிய நகரங்களுக்கு உலகின் கவனம் திரும்பும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் சிறப்பான திட்டமிடலால் சீனாவின் உள்பகுதியில் உள்ள நகரங்கள் போக்குவரத்து வசதிகள் உள்ளவையாகவும் வணிகம் செய்ய ஏற்றவையாகவும் இருப்பதாகக் கூறியுள்ள போர்ப்ஸ், இந்தியா இத்தகைய திட்டமிடல் எதையும் செய்யவில்லை என்றாலும் சீனாவைப் போன்றே சிறிய நகரங்களின் வளர்ச்சி இருக்கிறது என்றும் கூறியுள்ளது.
இன்போசிஸ் மற்றும் விப்ரோவின் தலைமையகங்கள் அமைந்துள்ள பெங்களூரு, இந்தியர்களின் சராசரி வருமானத்தைவிட இருமடங்கு வருமானம் உடைய அஹமதாபத், நடப்பாண்டில் 1 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ள சென்னை ஆகிய நகரங்கள் இந்திய நகரங்களில் முக்கியத்துவம் பெற்றவையாகும். இந்தியாவின் முக்கியத் தொழில் துறைகளான வாகன உற்பத்தி, மென்பொருள் உற்பத்தி மற்றும் பொழுது போக்கு ஆகியவை இம்மூன்று நகரங்களில் உள்ளதாகவும் போர்ப்ஸ் கூறியுள்ளது.
2025ஆம் ஆண்டு 1 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சென்னை, நடப்பாண்டில் இதுவரை 1 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. டில்லி, மும்பை உள்ளிட்ட மற்ற இந்திய நகரங்களைவிட இது அதிகம் என்று போர்ப்ஸ் கூறியுள்ளது.
இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழில்துறைகளை சென்னை தனதாக்கிக் கொண்டுள்ளது. குறிப்பாக வாகன உற்பத்தித் துறை. டெல், நோக்கியா, மொட்டோரேலா, சாம்சாங், சீமன்ஸ், சோனி மற்றும் பாக்ஸ்கான் ஆகிய எலக்ட்ரானிக் நிறுவனங்களும் வளர்ந்து வருகிறது. பொழுதுபோக்குத் துறையில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் போர்ப்ஸ் கூறியுள்ளது. Read more »
0 comments:
Post a Comment