Monday, 12 July 2010
Posted by
தமிழ் தாவா | Monday, July 12, 2010
21 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்க அரசு ஏற்பாடு
""பாஸ்போர்ட்' எளிமையாக பெறும் வகையில் தேசிய அளவில் 77 இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் புதிதாக திறக்கப்பட உள்ளது,'' என டில்லி பாஸ்போர்ட் அலுவலக முதன்மை அதிகாரி மாணிக்கம் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் புனல்குளம் கிங்ஸ் பொறியியல் கல்லூரியில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முகாம் நடந்தது.
அதில் பங்கேற்ற டில்லி பாஸ்போர்ட் அலுவலக முதன்மை அதிகாரி மாணிக்கம், நிருபர்களிடம் கூறியதாவது: "பாஸ்போர்ட்' எளிமையாக பெறும் வகையில், தேசிய அளவில் 77 இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் புதிதாக திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், கோவையில் தலா ஒன்று, திருச்சியில் இரண்டு, சென்னையில் மூன்று என ஒன்பது பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும். அங்கு, டிஜிட்டல் போட்டோ, கைரேகை பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். இம்மையங்கள் செப்டம்பரில் செயல்பாட்டுக்கு வரும். கர்நாடகத்தில் ஏற்கனவே நான்கு இடங்களில் இதுபோன்ற மையம் திறக்கப்பட்டு பரீட்சார்த்த முறையில் செயல்படுகின்றன.
தற்போது பாஸ்போர்ட்டுகள் 35 நாட்களில் வழங்கப்படுகின்றன. புதிய சேவை மையங்கள் திறந்தவுடன் 21நாட்களில் பெறலாம். பாஸ்போர்ட்டுகளில் முறைகேட்டை தவிர்க்க, விண்ணப்பம் செய்பவரை நேரில் வரவழைத்து, பதிவுகளை பெறுகிறோம். இம்மையங்களில் இ-பாஸ்போர்ட்டுகளாக வழங்கப்படும்.சாதாரண முறையில் ஏற்கனவே பெறப்பட்ட பாஸ்போர்ட்டுகள் புதுப்பிக்க வரும்போது,அவையும் இ-பாஸ்போர்ட்டுகளாக மாற்றப்படும். இவ்வாறு மாணிக்கம் கூறினார். திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் உடனிருந்தார்.
Source: dinamalar Read more »
0 comments:
Post a Comment